மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்க...
ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?
தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
சீனா மற்றும் தாய்லாந்திலும் கோவிட் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது இன்னமும் எவ்வளவு பரவக் கூடும், இந்தியா அலர்ட்டாக இருக்க வேண்டுமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

காங்காங்கில் சுவாசக்குழாய் சோதனைகள் நடத்தியதில், பெருந்தொற்றுக்குப் பிறகு இல்லாத அளவு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் இறுதிமுதல் மே 3 வரையிலான வாரத்தில் 31 கோவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல சமிக்கைகள் கோவிட் பரவல் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டுகின்றன.
வைரஸ் பரவல் பொது நிகழ்ச்சிகளையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரபல பாடகர் ஈசன் சான்னுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மே முதல் வாரம் 14,200 பேரிடம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இது இயல்பு நிலையைவிட 28% அதிகமாகும். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கோவிட் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை காலத்தில் சுவாச நோய்கள் அதிகரிக்கும் போக்கு இதற்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது அடைந்துள்ள மாறுபாடுகள் முன்பு இருந்தவற்றைவிட அதிகமாக தொற்றிக்கொள்ளும் தன்மைகொண்டவை அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே இதற்கு காரணம் எனக் கூறிய மருத்துவர்கள், மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
சீனாவிலும் இதேப்போல நோய்தொற்று அதிகரித்துள்ளது. தாய்லாந்தில் ஏப்ரல் மாதம் நடந்த சாங்க்ரான் திருவிழாவைத் தொடர்ந்து கோவிட் பரவல் அதிகரித்துள்ளது.
இது முந்தைய காலக்கட்டங்களில் இருந்ததுபோல பெரிய அலையாக இல்லாவிட்டாலும் நோய் பரவலின் தாக்கத்தைக் குறறைக்க எளியில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்கள் தங்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நிலை என்ன?
கோவிட் தொற்றின் இந்த அலை சற்று எச்சரிக்கை விடுப்பதாக இருந்தாலும், இந்தியர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் கூறுவதன்படி, தற்போது இந்தியாவில் 93 கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். இங்கு கொரோனா அலைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை.