சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி
தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்த டு பிளெஸ்ஸிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாடுவதற்காக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று (மே 17) முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படிக்க: ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் தங்களது அணிகளுடன் இணைந்து வருகின்றனர். தில்லி கேபிடல்ஸின் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டோனோவன் ஃபெரைரா மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்குக்குப் பதிலாக அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் தில்லி கேபிடல்ஸ் உள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் கோப்பையை வெல்லும் கேப்டனுக்கு மதிப்பு கூடுகிறது: சுரேஷ் ரெய்னா
தில்லியில் நாளை (மே 18) நடைபெறவுள்ள போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.