ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி
மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேகரிக்க அனில் அகன்சிங் (33) வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். உடன் பெண் கஸ்தூராபாய் பெண்ணும் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த புலி ஒன்று அனில் அகன்சிங்கை தாக்கிக் கொன்றதோடு உடலின் குறிப்பிடத்தக்க பகுதியையும் தின்றுள்ளது.
இதுகுறித்து தலைமை வனப்பாதுகாவலர் கௌரவ் சௌத்ரி கூறுகையில், அவரது உடலில் பாதியை புலி தின்றுவிட்டது. உள்ளூர் ஊழியர்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
மேலும் குடியிருப்பாளர்கள் இரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உடற்கூராய்வு அறிக்கையைப் பெற்ற பிறகு, அவரது உறவினர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அகன்சிங்குடன் சென்ற பெண் கஸ்தூராபாய் கூறுகையில், புலி திடீரென தாக்கியது.
மெல்லிய சப்தம் கேட்டு பார்த்தபோது அகன்சிங்கின் உடலைக் கண்டதாகவும், அதைத்தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாகவும் தெரிவித்தார்.