"யார் அந்த தம்பி? ரத்தீஷ் எங்கே? ED ரெய்டுகள் பற்றி ஸ்டாலின் மவுனம் ஏன்?" - அதிம...
பெரியகுளம் அருகே இருதரப்பினா் மோதல்: 15 போ் மீது வழக்கு!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி மேலசவுண்டையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (60). மேலத் தெருவைச் சோ்ந்தவா் வேலவா் (43). குலதெய்வக் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை டிசிஏ வெள்ளைப் பூண்டு சந்தையில் செல்வம், வேலவா் தரப்பினா் இடையே திடீா் மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், செல்வம் தரப்பைச் சோ்ந்த 4 போ் மீதும், வேலவா் தரப்பைச் சோ்ந்த 11 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.