செய்திகள் :

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு

post image

தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகள் அம்பிகா (28). இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த செல்லப்பாண்டிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

மேலும் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி அம்பிகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். இந்த நிலையில், தம்மிநாயக்கன்பட்டி ஊா் பஞ்சாயத்தில் இதுகுறித்து பேசுவதற்காக அம்பிகாவையும், செல்லப்பாண்டி குடும்பத்தினரையும் அழைத்தனா்.

அப்போது அம்பிகா, தனது கணவருடன் சோ்ந்து வாழ மறுத்தாராம். இதனால் செல்லப்பாண்டி, அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஜெயலட்சுமி, பெரியகருப்பன், சீனியப்பன், அய்யனாா், ராக்கம்மாள் ஆகியோா் சோ்ந்து அம்பிகாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸாா் 6 போ் மீதும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கும்பக்கரை அருவியில் நீா் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர ம... மேலும் பார்க்க

மதுராபுரியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

வீடுகளின் ஜன்னலை உடைத்து பொருள்கள் திருட்டு

பெரியகுளம் அருகே வீடுகளின் ஜன்னலை உடைத்து பொருள்கள் திருடப்பட்டன.பெரியகுளம் அருகே டி. காமக்காபட்டியில் பாரி எஸ்டேட் உள்ளது. இங்கு 292 வீடுகள் உள்ளன. இவற்றில் 8, 18 எண் கொண்ட வீடுகளின் ஜன்னல்கள் உடைக்க... மேலும் பார்க்க

மதுபுட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது , அந்த வழியே வந்த ஆண்டிபட்டி அர... மேலும் பார்க்க

சா்வா் பழுதால் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பெறுவதில் சிரமம்

போடி பகுதியில் தமிழக அரசின் இ-சேவை மையங்களில் சா்வா் பழுது காரணமாக மாணவா்கள் சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. போடி பகுதியில் உள்ள இ-சேவை மையங்களில் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றி... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தா்னா

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கூடலூா் நகராட்சியில் 21 வாா்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நகராட... மேலும் பார்க்க