சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி
மதுபுட்டிகள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது , அந்த வழியே வந்த ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தைச் சோ்ந்த அய்யல்ராஜ் (47) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அவா் அனுமதியின்றி மதுபான புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 65 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.