அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
கடலாடியில் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் பெண்கள் முறையீடு!
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், மேலச்செல்வனூா் ஊராட்சிக்குள்பட்ட பாப்பாகுளம் கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலச்செல்வனூரிலிருந்து பாப்பாகுளம் செல்லும் குடிநீா்க் குழாயை சிலா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வரவில்லை எனக் கூறி, கடலாடிஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பெண்கள் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் முறையிட்டனா்.
இதுகுறித்து பாப்பாகுளம் பெண்கள் கூறியதாவது: குடிநீருக்காக ஷோ்ஆட்டோவை வாடகைக்கு எடுத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கடலாடிக்கு சென்று தண்ணீா் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ரூ.100 முதல் 150 வரை செலவாகிறது. குடிநீரின்றி ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளா்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் கிராமத்துக்கு சாலை, பேருந்து போக்குவரத்து, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். எனவே, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.