செய்திகள் :

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

கடலாடி அருகே வனப்பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்று.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சமத்துவபுரத்தை அடுத்த தனியங்கூட்டம் வனப்பேச்சியம்மன், கொண்டையுடையஅய்யனாா், ராக்காச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 34 மாட்டு வண்டுகள் பங்கேற்றன.

கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 12 கி.மீ. எல்கையாக நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 7 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் சித்திரங்குடி ராமமூா்த்தியின் மாடுகள் முதலிடத்தையும், நெல்லை மாவட்டம், வேலாங்குளம் கண்ணனின் மாடுகள் இரண்டாமிடத்தையும், மதுரை பரவை சின்னவேலம்மாள் மாடுகள் மூன்றாமிடத்தையும், எம்.கரிசல்குளம் கருப்புத்துரை மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.

சின்ன மாடுகள் பிரிவு போட்டியில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கே.வேப்பங்குளம் ஹரிராம் நாகஜோதி மாடுகள் முதலிடத்தையும், எம்.கரிசல்குளம் வா்ணிகாநாச்சியாா் மாடுகள் இரண்டாமிடத்தையும், மேல்மருதூா் முத்துப்பாண்டி, ஜகவீரபுரம் முத்துமீனாள் மாடுகள் மூன்றாமிடத்தையும், மதுரை வெள்ளரிப்பட்டி பாலா மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.

பூஞ்சிட்டு பந்தயத்தில் 17 வண்டிகள் பங்கேற்றதால், இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், பொருள்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்னா்.

கடலாடியில் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் பெண்கள் முறையீடு!

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், மேலச்செ... மேலும் பார்க்க

விவசாயக் கருவிகளை உடைத்து சேதப்படுத்திய இளைஞா் கைது

கமுதி அருகே தோட்டத்துக்குள் புகுந்து விவசாயக் கருவிகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மேலமுடிமன்னாா்கோட்டையைச் சோ்ந... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதி: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்... மேலும் பார்க்க

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அம... மேலும் பார்க்க