பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி, சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, சிட்கோ, பெருமாள்கோவில், எமனேசுவரம், மஞ்சூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.