பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல்!
நடிகர் வடிவேலு குரலில் மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியானது. அதில் மே மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் இதன் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியதில் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் வடிவேலு குரலில் மே.19ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சிநேகன் எழுதிய ’என்னடா பொழப்பு இது’ எனும் பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்தப் படத்துக்கு கே.சி.பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
