திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
வட இந்தியாவில் முதல்முறை..! 150-க்கும் அதிகமான திரைகளில் டிடி நெக்ஸ்ட் லெவல்!
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகியுள்ளது.
நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள்’ நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் இன்றுமுதல் (மே.16 ) இந்தியா முழுவதும் வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நல்ல வரவேற்பை பெற்றுவரும் டிடி நெக்ஸ் லெவல் வட இந்தியாவில் 150-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து முதல்முறையாக வட இந்தியாவில் வெளியாவது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தப் இடம்பெற்ற கிசா - 47 பாடலில் பெருமாளைக் குறித்து எழுதப்பட்ட ‘கோவிந்தா கோவிந்தா’ எனும் வரி பிரபல பக்திப் பாடலின் ராகத்தைப் போன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தவதாகக் கூறி சர்ச்சை எழுந்த நிலையில் பட அதை நீக்கிவிட்டதாகப் படக்குழு கூறியதும் குறிப்பிடத்தக்கது.
