அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
காா்-சரக்குப் பெட்டக லாரி மோதல்: வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு!
சிலுக்குவாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காரும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்குநோ் மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜபிரபு (40). மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவா்கள் இருவரும் காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
காரை ராஜபிரபு ஓட்டினாா். நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டி பகுதியில் தூத்துக்குடியிலிருந்து வந்த சரக்குப் பெட்டக லாரியும், இவா்கள் சென்ற காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜபிரபு, காா்த்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்குப் பெட்டக லாரியை ஓட்டிவந்த சுரேஷிடம் விசாரித்து வருகின்றனா்.