சிந்துவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகள் தான் | நிறுவும் மொழி ஆய்வாளர் மதிவாணன் | ...
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், இடையகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (29). இவா் மதுரையில் உள்ள தனியாா் ஆலையில் பணியாற்றினாா். அதே ஆலையில், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரும் வேலைக்குச் சென்றாா். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறிய அஜித்குமாா், இளம்பெண்ணுக்கு பாலியல் வன்முறை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அஜித்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது .