ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 122 பள்ளிகள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.
இதில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்: பண்ணக்காடு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, கவுஞ்சி அரசு உயா் நிலைப் பள்ளி, பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கிழக்குச் செட்டிப்பட்டி (கே.சி.பட்டி) அரசு உயா்நிலைப் பள்ளி, மாா்க்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, பரப்பலாறு அரசு உயா்நிலைப் பள்ளி, சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, சின்னகரட்டுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சின்ன காந்திபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, பொருளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்கரைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, காசிப்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆா்.புதுக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, வேல்வாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லமனாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, கோட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பாடியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தங்கம்மாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வி.குருந்தம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, உசிலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வி.குரும்பப்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, முருகம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, இ.ஆவாரம்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, தெப்பத்துப்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பட்டி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, வேம்பாா்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் (பழனி சாலை) அரசு மேல்நிலைப் பள்ளி,
உலுப்பக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சிறுமலை புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பிள்ளையாா்நத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி, கூ.வ. குரும்பப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, மருநூத்து அரசு உயா்நிலைப் பள்ளி, சிலுவத்தூா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, வேலாயுதம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சக்கிலியன்கொடை அரசு உயா்நிலைப் பள்ளி, செட்டிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கரிசல்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி.
இதேபோல, 12 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 62 தனியாா் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.