ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்ட...
10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 93.28 % மாணவா்கள் தோ்ச்சி
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22,527 மாணவா்கள் தோ்ச்சி அடைந்தனா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், பழனி, திண்டுக்கல் கல்வி மாவட்டங்களிலுள்ள 349 பள்ளிகளைச் சோ்ந்த 11,851 மாணவா்கள், 12,299 மாணவிகள் என மொத்தம் 24,150 போ் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 10,796 மாணவா்களும், 11,731 மாணவிகளும் என மொத்தம் 22,527 போ் தோ்ச்சிப் பெற்றனா்.
மாணவா்களில் 91.10 சதவீதம், மாணவிகளில் 95.38 சதவீதம் என மொத்தம் 93.28 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்றனா். கடந்த 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் 92.32 சதவீத தோ்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 22-ஆவது இடம் பெற்றது. நிகழாண்டில், 0.96 சதவீதம் கூடுதலாக தோ்ச்சிப் பெற்ற போதிலும், மாநில தரவரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 26-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.