செய்திகள் :

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

post image

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.

ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித் தந்துள்ளார்.

கத்தார் நாட்டின் தோகாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

இந்த நிலையில், தனது 18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார். இதன் மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.

போட்டியில் முதலிடத்தை ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் (91.06 மீ) பெற்றிருந்தாலும், நீரஜ் சோப்ராவின் சாதனை பெருமைக்குரியதே என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மற்றோர் இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீ தூரம் எறிந்து, எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க