செய்திகள் :

AK 64: ``என்னுடைய அடுத்த படத்தை நவம்பரில் தொடங்குகிறேன்; அடுத்தாண்டு ரிலீஸ்!" - அஜித்

post image

2025-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் அஜித் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியானது.

அஜீத்

அதைத் தொடர்ந்து, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியது.

தற்போது அஜித்தின் கைவசமுள்ள திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

'குட் பேட் அக்லி' படத்தின் இறுதிக் காட்சியில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் இயக்கவிருப்பதாகக் குறிப்பிடும் வகையில் ஒரு சிறிய குறியீடும் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அஜித் பேசியுள்ளார்.

Good Bad Ugly
Good Bad Ugly

அஜித் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, எனது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான திரைப்படத் திட்டங்களைப் புரிந்துகொண்ட இயக்குநர்களும் தயாரிப்பாளரும் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தரமான திரைப்படங்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

எனது அடுத்த திரைப்படத்தை இந்த நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அந்தத் திரைப்படம் வெளியாகும் என நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.

Thug Life: 'எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை இது' - மிரட்டும் கமல், சிம்பு | வெளியானது டிரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க

Soori: 'என்னோட பேரு ராமன்; ரஜினி சார் படத்தைப் பார்த்துதான்..!' - நடிகர் சூரி சொல்லும் பெயர் காரணம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருந்தார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை வைத்து இயக்கி... மேலும் பார்க்க

Maanan: "பலே பாண்டியா... அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" - சூரியைப் புகழும் வைரமுத்து

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் நேற்று (மே 16) வெளியானது. காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமான `மாமன்', திரையரங்குகளில் ரசிகர்களிட... மேலும் பார்க்க

Ace: "ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன்" - விஜய் சேதுபதி குறித்து நடிகை ருக்மிணி

ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) . கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத... மேலும் பார்க்க

"எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமானு கேட்டப்ப அந்த படத்த காட்டினேன்" - விஜய் சேதுபதி

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) .கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த... மேலும் பார்க்க

Vijayakanth: `பத்திரமெல்லாம் வேணாம் பணத்தை வாங்கிட்டு போ' - மூப்பனார் பற்றி மனம் திறந்த விஜயகாந்த்

பெற்றோர்களின் நினைவாக...கேப்டன் விஜயகாந்த் தன் பெற்றோர்களின் நினைவாக ஆரம்பித்தது தான் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. அவர் இதற்கு முன்னர் பெற்றோர்களின் நினைவாக கோயம்பேட்டில் கட்டிய கல்யாண மண்டபம... மேலும் பார்க்க