காஸா போர்: கடந்த 2 நாள்களில் 300 பேர் பலி!
காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250 மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் காஸாவுக்கு பிடித்துச் சென்றதுடன், அவர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் பல்வேறு கட்டமாக தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடாய், கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்து விட்டதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த உயிரிழப்பு 53,000த்தை கடந்துள்ளது என்று காஸா சுகாதாரத் துறை தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.