திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்
4 மாதத்தில் திருமணம்: விஷால்
நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் புதிய படம் இன்னும் அறிக்கப்படவில்லை. மீண்டும் சுந்தர். சி படத்திலேயே அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை வருகிற ஆக. 15 ஆம் தேதி திறக்க உள்ளதால் அதற்கான பணிகளில் விஷால் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஷால், “நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடித்ததும் திருமணம் செய்துகொள்வேன் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல், இன்னும் 4 மாதங்களில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஒருமாதமாகக் காதலித்து வருகிறேன். அப்பெண் யார் என்பதை திருமணத்தன்று தெரியப்படுத்துவேன். இக்கல்யாணம் என் பிறந்த நாளான ஆக. 29 ஆம் தேதியன்றும் நடைபெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் முதல்நாள் வசூல் எவ்வளவு?