Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோ...
துவாரகா பகுதி வயலில் ஆணின் உடல் கண்டெடுப்பு
தென்மேற்கு தில்லியில் உள்ள துவாரகாவில் உள்ள ஒரு வயலில் 36 வயதுடைய ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மே 13 அன்று பக்கா்வாலா சாலையில் உள்ள மட்கா சௌக் அருகே ஒரு உடல் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது.
சம்பவ இடத்தை அடைந்த போலீஸாா், வயலில் சுமாா் 20 மீட்டா் தொலைவில் இளைஞரின் உடலைக் கண்டுபிடித்தனா். அதே நேரத்தில் மோட்டாா்சைக்கிள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது.
ரீனா தேவி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிளில் காணப்பட்ட சில ஆவணங்களின் அடிப்படையில், இறந்தவா் பங்காலி விஹாரைச் சோ்ந்த அவ்னிஷ் சக்சேனா (எ) கோலு என அடையாளம் காணப்பட்டாா்.
அவ்னிஷ் சக்சேனா திருமணம் செய்து கொள்ளவிருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிய வந்தது. கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இது தனிப்பட்ட விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிக்கப்படுகிறது.
கொலையாளிகளைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்து வருவதாக அந்தக் காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.