செய்திகள் :

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

post image

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தங்களிடம் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

‘கிதியோனின் தோ்கள் நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தரைவழித் தாக்குதலை, ராணுவம் தனது மிகப் பெரிய பலத்தைப் பயன்படுத்தி நடத்திவருகிறது என்றாா் அவா்.முன்னதாக, காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது நினைவுகூரத்தக்கது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவது, இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகிய இஸ்ரேலின் நோக்கங்களை அடையும் நோக்கில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அப்போது இஸ்ரேல் அதிகாரிகள் கூறினா்.இந்தத் திட்டத்தின் கீழ், காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் காலவரையின்றி இஸ்ரேல் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று அப்போது அவா்கள் கூறினா்.

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் தற்போது தீவிர தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது காஸாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்த தரைவழித் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாக காஸா முழுவதும் இஸ்ரேல் படையினா் கடந்த 2 நாள்களில் நடத்திய தாக்குதலில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.காஸாவை சுமாா் 38 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், அங்கு வன்முறையில் தங்கள் வீரா்களின் உயிரிழப்பு அதிகமானதாலும், பாலஸ்தீனா்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ‘யூதா்களுக்கான நாடு’ என்ற நிலைக்கு அது எதிரானது என்பதாலும் அங்கிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு காஸாவில் தோ்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் தொடா்ந்துவந்த மோதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியா்கள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா பகுதியை மீண்டும் கைப்பற்றும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள். உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூ... மேலும் பார்க்க

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது போ் உயிரிழந்தனா்.இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு சுமி பகுதியில் அமைந்துள்ள பில... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில்... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற... மேலும் பார்க்க