Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்
ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
இன்று காலை 5.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் மொத்தமாக 17 நபர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் மின்கசிவு இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டெடுத்திருக்கிறார்கள். காயமடைந்த 10 நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நகைக் கடைகள் அதிகமாக அமைந்திருக்கின்றன. இந்த நகைக் கடைகள் அனைத்துமே 100 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, "நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.
இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.
இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி பெற முயல்வேன்" எனக் கூறியிருக்கிறார்.
Deeply anguished by the loss of lives due to a fire tragedy in Hyderabad, Telangana. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) May 18, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be…
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து பிரதமர் அலுவலகம், "தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்" என எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs