செய்திகள் :

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

post image

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.

மேலும் கப்பலின் மூன்று கம்பங்கள் உடைந்து விழுந்தன.

மெக்சிகன் கடற்படை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், கப்பலில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 19 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், யாரும் தண்ணீரில் விழாததால் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் எக்ஸ் தளத்தில், 142 ஆண்டுகள் பழமையான பாலம் பெரிய சேதத்திலிருந்து தப்பியதாகவும், கப்பலில் இருந்த 277 பேரில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஐஸ்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நியூயார்க் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித... மேலும் பார்க்க

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது போ் உயிரிழந்தனா்.இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு சுமி பகுதியில் அமைந்துள்ள பில... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில்... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற... மேலும் பார்க்க