செய்திகள் :

கரூர்: அஜித் பட கிராமம்போல ஒதுக்கப்படுகிறோம்; அடிப்படை வசதி கேட்டு 18 நாட்களாக போராடும் மக்கள்

post image

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி அருகே இருக்கிறது சிந்தலவாடி. இந்த ஊராட்சியில் இருக்கும் காரவனத்தான் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய மே ஒன்றாம் தேதி முதல் கருப்புக் கொடி கட்டி கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது சிந்தலவாடி. இந்த ஊராட்சி கிராமத்தில் தினந்தோறும் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீருக்காக இரண்டு கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் தினந்தோறும் அலைந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

people

புனவாசிப்பட்டி பகுதியில் இருந்து காரவனத்தான் கோயில் தெருவிற்கு வரும் சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் மண் சாலையாக உள்ளது. இங்கே மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தவிர, மின் கம்பங்கள் இருந்தும் தெரு விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதுபற்றி மேலும் நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், "இங்கிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள் என்று பலரும் இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் இன்றளவும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக உள்ளன. இதனால், எங்களது அடிப்படைத் தேவைகள், தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து தரும்வரை போராடுவது என்று முடிவெடுத்தோம். இதனால், கடந்த மே ஒன்றாம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வீடு தோறும் கருப்பு கொடி கட்டி கோரிக்கை மனுவினை அரசுக்கு அளித்தோம்.

protest

ஆனால், கடந்த 18 நாட்களாக இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த கூட வரவில்லை என்பதால், நாங்கள் கொந்தளிப்பில் உள்ளோம். எங்களை இந்த அரசும், அதிகாரிகளும் மதிக்கும் லட்சணம் இதுதான். நாங்கள் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் வருகிற அத்திப்பட்டி கணக்காக அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு அப்பால் உள்ளோம். எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட இருக்கிறோம். அடுத்தடுத்து வேறுவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்க இருக்கிறோம்" என்றார்கள்.

Vijay: "தம்பி விஜய் அப்படிக் கூறவில்லையே" - பாஜக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்குத் தமிழிசை பதில்

பாஜக - தவெக கூட்டணி குறித்து முன்னாள் தெலங்கானா ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது..."பாஜக உடன் தவெக கூட்டணி இல்லை என்று அந்தக் கட்சியிலிருந்... மேலும் பார்க்க

பாஜக அரசு ஆளுநர்களை பயன்படுத்துகிறது; இணைந்து எதிர்ப்போம் - தழிழக முதல்வர் 8 முதல்வர்களுக்கு கடிதம்

ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால அளவை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து, மத்திய அரசு அளவிலும், தமிழ்நாடு மாநில அரசு அளவிலும் பரபரப்பு பற்றி கொண்... மேலும் பார்க்க

`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைறையினர் எட்டுமணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினார்கள்.ஆர்.பி.உதயகுமார்அப்போது அங்கு கட்சி நிர்வாக... மேலும் பார்க்க

சசி தரூர் விவகாரம்; `பாஜக அரசு சிறப்பாக நாரதர் முனி அரசியலைச் செய்கிறது' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் இந்திய அரசு அனைத்துக்கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்காக 7 கட்சிகளின் எம்.பி... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் நகரில் தீயணைப்புத் துறைக்குப் புதிய கட்டிடம் ரூ 2,50,00,000 மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்தப் பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்... மேலும் பார்க்க