செய்திகள் :

தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்

post image

தோனியின் ரசிகர்கள் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தபோது, ஹர்பஜன் சிங் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசியிருப்பதாவது: ”எந்தவொரு கிரிக்கெட் வீரருக்காவது விசுவாசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது தோனி ஒருவருக்கே! மற்ற வீரர்களெல்லாம் பணம் கொடுத்தும் ரசிகர் பட்டாளத்தை திரட்டடியுள்ளனர்” என்றார்.

மேற்கண்ட கருத்து பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், ஹர்பஜன் பொய் சொல்லவில்லை. அவரது பேச்சில் நியாயம் இருக்கிறதென்பதே தோனி ரசிகர்களின் கருத்தாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாள்களுக்கு முன் விராட் கோலி அறிவித்த மறுநொடியிலிருந்தே, அவரைப் பற்றிய கருத்துகள், விடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களை கடந்த சில நாள்களாக ஆக்கிரமித்திருந்தன. இந்த நிலையில், கோலியின் ரசிகர்களைக் குறிவைத்தே ஹர்பஜன் சிங் இப்படி பேசியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.

வீரர்கள் அவர்களை நன்றாக புரிந்துகொண்டால்.... என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்?

கிரிக்கெட் வீரர்கள் அவர்களை நன்றாக அறிந்துகொள்ளும்போது அவர்களது திறன் மேலும் அதிகரிப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் தலைமைப் ... மேலும் பார்க்க

அடுத்த கேப்டனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு; பும்ராவுக்கு ஆதரவாக வேகப் பந்துவீச்சாளர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கிரைக் பிரத்வெயிட் க... மேலும் பார்க்க

இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா ம... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர... மேலும் பார்க்க