செய்திகள் :

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்: கனடா பிரதமர் இரங்கல்!

post image

இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று(மே 18) இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ போரில் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் இணைந்து ஈழத் தமிழா்களின் வாழ்விடங்கள், பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழித்தன. இறுதியாக, 2009 மே 17, 18 ,19 ஆம் தேதிகளில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இது குறித்து கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் நிகழ்ந்த ஆயுதச் சண்டை முடிவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ் இனப் படுகொலை நாளான இன்றைய நாளில், நாம் பறிகொடுத்த உயிர்களையும், பிரிந்தொழிந்த குடும்பங்களையும், சிதைக்கப்பட்ட சமூகங்களையும், இந்நாள் வரை மாயமாகி கண்டுபிடிக்க முடியாது போன நபர்களையும் நினைவுகூருகிறோம்.

கனடாவில் தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் தங்களுடன் தாங்கள் இன்னுயிராய் நேசித்தவர்களைப் பற்றிய நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காஸாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூடல்!

காஸாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

திபெத், ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

திபெத், ஆப்கனில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. திபெத்தில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தம்? டிரம்ப் மத்தியஸ்தம்!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், 1,179-வது நாளாக நீடித்த... மேலும் பார்க்க

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள். உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூ... மேலும் பார்க்க