வேடசந்தூா் பகுதியில் மே.19 மின்தடை!
வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக லகுவணம்பட்டி, அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியக்கவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, ஸ்ரீராமபுரம், சோனாபுதூா், மாத்தினிப்பட்டி, பூத்தாம்பட்டி, அம்மாப்பட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டி தெரிவித்தாா்.