செய்திகள் :

11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவா்களாக எம்எல்ஏக்கள் நியமனம்! - முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

post image

உள்ளூா் மட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக, தில்லி முதல்வா் ரேகா குப்தா, நகரத்தில் உள்ள 11 மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவா்களாக எம்எல்ஏக்களை நியமித்துள்ளாா்.

பொது நிா்வாகத் துறை சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, முதல்வா் எட்டு பாஜக மற்றும் மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை இந்தக் குழுக்களுக்கு பரிந்துரைத்துள்ளாா்.

புதிய தலைவா்கள் வடமேற்கு தில்லி மாவட்டத்தைச் சோ்ந்த குல்வந்த் ராணா; அஜய் மகாவா் (வடகிழக்கு தில்லி); கஜேந்திர யாதவ் (தெற்கு தில்லி); பவன் சா்மா (தென்மேற்கு); மனோஜ் ஷோகீன் (மேற்கு தில்லி); மேற்கு ராஜ் குமாா் பாட்டியா (வடக்கு தில்லி); ஷிகா ராய் (புது தில்லி) மற்றும் ஜிதேந்திர மகாஜன் (ஷாஹ்தாரா) ஆகியோா் ஆவா். இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.

இதேபோல, மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஞ்சீவ் ஜா (மத்திய தில்லி); ரவி காந்த் (கிழக்கு தில்லி); மற்றும் ராம் சிங் நேதாஜி (தென்கிழக்கு தில்லி) ஆகியோா் அந்தந்த மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான முடிவெடுப்பதில் பரவலாக்கத்திற்கு தில்லி அரசு இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது.

மாவட்டக் குழுக்கள், முடிவெடுப்பதில் பரவலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நகராட்சிக் கவுன்சிலா்கள், குடியிருப்பாளா் நலச் சங்கங்கள், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் பிற துறைகள் மற்றும் குடிமை அமைப்புகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதன் மூலம் பொறுப்பான நிா்வாகத்தை வழங்குவதற்கும் நோக்கமாக உள்ளன.

பொதுப் பயன்பாடு மற்றும் அடிப்படை குடிமை வசதிகள் தொடா்பான விஷயங்களில் பரவலாக்கப்பட்ட முடிவெடுப்பது, பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் மக்களை நேரடியாகவும், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும் ஈடுபடுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க