செய்திகள் :

'திரும்ப வந்துட்டேனு சொல்லு... 2026 தேர்தலில் தனித்து போட்டி’ - சீமான் அறிவிப்பு

post image

2009 ஆம் ஆண்டு இலங்கையில், தமிழ் ஈழ மக்கள் இனப்படுகொலைச் செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ மனோரஞ்சன் பியாபாரி மற்றும் ஜக்மோஹன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்

மனோரஞ்சன் தன் உரையை இந்தியில் பேசினார். ஜக் மோகன் சிங் ஆங்கிலத்தின் பேசினார். சீமான் தனது உரையில் தோல்வி நிலை என நினைத்தால் என்று பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

சொந்த நிலத்திலேயே அடிமைகளாக...

கடைசியாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்," மே 18, இனப்படுகொலை நாள். நம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள். சொந்த தாய் மண்ணிலேயே நம் தமிழர்கள் என்ற உணர்வை இழந்ததால் , சாதி மதங்களினால் பிரிந்ததால் சொந்த நிலத்திலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சீமான்

அரசியல் வரலாற்றில் வாழ்க ஒழிக என்ற கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தமிழ் தாய் வாழ்க... தலைவர் பிரபாகரன் வாழ்க... என்ற முழக்கத்தை மட்டுமே முன்வைக்க வேண்டும். இது கட்சியல்ல, அடிமைப்பட்ட தமிழ் தேசிய மக்களின் மீட்சிக்கு போராட வந்த ராணுவம்.

கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான்!

தமிழ்நாட்டில் இருந்து கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான். எனது தலைவனுக்கும் எனக்கும் இடையில் என்ன நடந்தது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு என்ன சொல்லப்பட்டது? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என் கனவு நிறைவேறும் போது சொல்வேன். பொறுமை மிக அவசியம். நமக்கு இருக்கும் பொறுப்பையும் கடமையும் நம் உணர வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.

சீமான்

20 நாடுகளின் துணை கொண்டு தான் இறுதிப் போரில் விடுதலை புலிகளை வீழ்த்தினார்கள். அது சிங்களவர்களுக்கும், விடுதலை புலிகளுக்குமான போர் அல்ல, உலகப் போர். நாற்பக்கமும் பகைவர் கூட்டம், நடுவிலே நாம் தமிழர் கட்சி. நான் தலைவன், நீ தொண்டன் அல்ல. நாம் அனைவரும் புரட்சியாளர்கள். நம்மை உருவாக்கியது பிரபாகரன்.

தமிழ்நாட்டுக்குள் ஒன்றரை கோடி வட இந்தியர்கள் வந்து விட்டார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். அப்படியென்றால் இந்தி பேசும் ஒன்றரை கோடி பேர், என் நிலத்திற்கு எதற்கு வந்தனர். இங்கு குடும்ப அட்டை, வாக்குரிமை பெறுகிறான். இது பேராபத்தை உருவாக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இன்னும் 10 ஆண்டுகளில் அவன் நம்மை அடித்து விரட்ட போகிறார்கள்.

நாம் தமிழர் கூட்டம்

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அந்த வாக்கு வட இந்தியர்களின் வாக்கு தான். இப்படியே விட்டால், அவன் நமது அரசியலை தீர்மானிப்பான். இது இந்தி பேசும் மாநிலமாக்கப்படும். நாங்கள் ஆள்மாற்றத்திற்காகவும் ஆட்சி மாற்றத்திற்காகவும் வந்த அரசியல்வாதிகள் அல்ல. அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்த புரட்சியாளர்கள்.

ரஜினிகாந்த் சொன்னது போல...

2016 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் 1.1% ஒட்டை பெற்றோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 5% ஓட்டை பெற்றோம். 2021 தேர்தலில் 17.5 லட்சம் வாக்குகளை பெற்றோம். இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. 2024 தேர்தலில் மைக் சின்னத்தை தந்தார்கள். அந்த தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை பெற்றோம். எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.

சீமான்

4 முறை தோற்றாலும், ஐந்தாவது முறையும் தனித்து பொதுத்தேர்தலில் நிற்பது இந்திய வரலாற்றில் நாம் தமிழர் கட்சி தான். 2026 தேர்தலுக்கு விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் சொன்னது போல நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 2026 தேர்தலில் 117 இடங்களுக்கு பெண்களுக்கு, 117 இடங்களுக்கு ஆண்களுக்கு, 134 இடங்கள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும்.” என்றார்.

`பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான்; அவன் சுயரூபம்...’ - திமுக இளைஞரணி நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன... மேலும் பார்க்க

நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா... சீமானின் புகாரும் அரசு விளக்கமும்!

நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரெழுச்சிப் பொது கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “மே 18 துயரம் மிகுந்த நாள். மே 18-ம் தேதி தமிழ... மேலும் பார்க்க

கரூர்: அஜித் பட கிராமம்போல ஒதுக்கப்படுகிறோம்; அடிப்படை வசதி கேட்டு 18 நாட்களாக போராடும் மக்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி அருகே இருக்கிறது சிந்தலவாடி. இந்த ஊராட்சியில் இருக்கும் காரவனத்தான் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

Vijay: "தம்பி விஜய் அப்படிக் கூறவில்லையே" - பாஜக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்குத் தமிழிசை பதில்

பாஜக - தவெக கூட்டணி குறித்து முன்னாள் தெலங்கானா ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது..."பாஜக உடன் தவெக கூட்டணி இல்லை என்று அந்தக் கட்சியிலிருந்... மேலும் பார்க்க

பாஜக அரசு ஆளுநர்களை பயன்படுத்துகிறது; இணைந்து எதிர்ப்போம் - தழிழக முதல்வர் 8 முதல்வர்களுக்கு கடிதம்

ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால அளவை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து, மத்திய அரசு அளவிலும், தமிழ்நாடு மாநில அரசு அளவிலும் பரபரப்பு பற்றி கொண்... மேலும் பார்க்க