செய்திகள் :

Trump:``பாகிஸ்தான் மக்கள் புத்திசாலிகள்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்! - காரணம் என்ன?

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கில் இருநாடுகளுடனும் வர்த்தகத்தை முன்வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு விதிக்கப்படவிருந்த 27% வரியை 2025 ஏப்ரல் 10 முதல் 90 நாட்களுக்கு (ஜூலை 9 வரை) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில் போர்பன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கப் பொருள்களின் மீதான வரிகளை இந்தியா குறைத்தது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "எந்த வர்த்தக ஒப்பந்தமும் இருதரப்புகளுக்கும் நன்மை தரும் வகையில் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் Fox News-க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்திருக்கிறார்.

அதில்,``உலகின் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், அவர்கள் அமெரிக்காவிற்கான வரிகளில் 100% குறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது விரைவில் நடக்கும். நான் அவசரப்படவில்லை.

பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் நம்பமுடியாத பொருள்களை தயாரிக்கும் புத்திசாலிகள். அவர்களின் பொருள்கள் மீது 29% வரி விதிக்கப்படுவது பாகிஸ்தானிய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று அச்சுறுத்தல் நிலையில் கூட, அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.

இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்

பாகிஸ்தான் ஏற்கெனவே 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக 2.1 பில்லியன் டாலர்களை மட்டுமே பெறுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி (இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை) தீர்த்து சமாதானம் செய்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' - திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! - முழு விவரம்!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரி... மேலும் பார்க்க

``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்களை சாடும் எடப்பாடி

ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எ... மேலும் பார்க்க

``புற்றுநோயால் அவதிப்படும் ஜோ பைடன் நலம் பெற வேண்டுகிறோம்'' - ட்ரம்ப், கமலா ஹாரிஸ், ஒபாமா பதிவு

அமெரிக்கவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 1942-ம் ஆண்டு நவம்பர்-20 ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 82. இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிக்கல்கள... மேலும் பார்க்க

உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சி, மாவ்சின்ராமில் தண்ணீர் பஞ்சம் வர என்ன காரணம்?

சில நாள்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள கிராமம் ஒன்றில், பெண்கள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் வீடியோ வைரலானது. அந்தக் கிணற்றுக்குள்ளும் 'ஆஹா... ஓஹோ' என்று தண்ணீர் இரு... மேலும் பார்க்க