மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி: ஹைதராபாதுக்கு 206 ரன்கள் இலக்கு!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே விக்கெட் இழப்பின்றி எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், ஷுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
பிளே ஆஃபில் மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?
நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
தில்லிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், 4-வது மற்றும் கடைசி இடத்துக்கான போட்டி நிலவுகிறது.
Time is running out! ⏳
— IndianPremierLeague (@IPL) May 18, 2025
3️⃣ spots taken. Just 1️⃣ left.
Which team will grab that last golden ticket? ✍ #TATAIPLpic.twitter.com/gaCjDRtPsQ
4-வது இடத்துக்கான போட்டியில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளும், 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளும், 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்குள் நிலவுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறப் போகும் நான்காவது அணி யார் என்பது இன்னும் ஒரு சில போட்டிகள் நிறைவடைந்தவுடன் தெரிந்துவிடும்.
இதையும் படிக்க: டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.