'8000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை' - வளர்ச்சியடைந்த மாநிலமான மகாராஷ்டிராவில் அவல...
லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளார் லுங்கி என்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் பிலெஸ்ஸிங் முசரபனி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் லுங்கி என்கிடி, தென்னாப்பிரிக்கா அணியுடன் பயிற்சியில் இணையவுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இதனிடையே, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி வருகின்ற மே 26 ஆம் தேதி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவருக்கு மாற்றாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிலெஸ்ஸிங் முசரபனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்காக 70 டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை ரூ. 75 லட்சத்துக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.