ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப்படும் முறைகள் குறித்து கண்காணித்து இந்திய மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை வெளியிடும் அமைப்பு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு. (Indian Computer Emergency Response Team - CERT-In)
இந்த குழு அளிக்கும் அப்டேட்களை தொடர்ந்து பின்பற்றினால் பெருமளவிலான இணைய மோசடிகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
இந்த நிலையில், கூகுள் குரோம் செயலியை விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் குரோம் செயலியை கணினியில் பயன்படுத்துபவர்களை குறிவைத்து உலகளவில் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதலுக்கு சமரசமானால் கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் கூகுள் குரோம் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதளவிலான பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
சிஐவிஎன் - 2025 - 0099 (CIVN - 2025 - 0099) என்ற சைபர் தாக்குதலை கூகுள் குரோம் செயலி தற்போது சந்தித்து வருகின்றது. விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் கூகுளின் முந்தைய வெர்சனான 136.0.7103.113/.114, லினெக்ஸ் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் வெர்சன் 136.0.7103.113 ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
ஆகையால், இந்த வெர்சனை வைத்திருப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க அப்டேட் வெர்சனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கணினிக்கு தேவையான பாதுகாப்பு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.