ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!
கில் ரீமேக்கில் துருவ் விக்ரம்?
ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில் (kill). 120 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்களே கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்றதால் இந்தியாவில் உருவான சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று என பாராட்டுகளைப் பெற்றது.
இதில் நாயகனாக லஷ்யா லால்வானி முக்கிய கதாபாத்திரத்தில் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்ற ரமேஷ் வர்மா தமிழ் ரீமேக்கில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தற்போது தமிழ் ரீமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர். சி!