திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி.....
விஜய் ஆண்டனியின் புதிய பட பெயர்!
நடிகர் விஜய் ஆண்டனி - ஜென்டில்வுமன் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.
விரைவில் இவர் நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் திரைக்கு வருகிறது.
அடுத்ததாக, அண்மையில் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற ‘ஜென்டில்வுமன்’ படத்தின் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ”லாயர்” எனப் பெயரிட்டுள்ளனர்.
நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதையும் படிக்க: தக் லைஃப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு என்ன?