பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
இளம்பெண்ணை திருமணம் செய்தவா் கைது
ஒசூா்: சூளகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி ஊராட்சி உஸ்தலஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (28). விவசாயியான இவா் 17 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்தாா். இவா்களின் காதலுக்கு பெற்றோா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராமன் அந்தப் பெண்ணை கடந்த 17-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். அதுகுறித்து பெண்ணின் தந்தை ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், இளம்வயது திருமண தடை சட்டம் பிரிவின் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராமனை கைது செய்தனா்.