தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீ...
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்
ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு-2025 முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் இந்தப் பள்ளி மாணவி நிதா்சனா 99.91 சதவீதம், மாணவா் சுசிா் குமரவேல் 99.90 சதவீதம், சித்தரஞ்சன் 99.86 சதவீதம், திவேஸ் வேலவன் 99.83 சதவீதம், தேவதா்சன் 99.66 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றனா்.
40 மாணவ, மாணவியா் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இதில் 27 மாணவ, மாணவியா் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனா்.
பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் அகில இந்திய போட்டித் தோ்வு நிறுவனமான ஆகாஷ் பயிற்சி மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் நேரடியாக பள்ளிக் கல்வி படித்துக் கொண்டிருக்கும்போதே பாவை பள்ளி மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்கள் ஐஐடி, ஐஐஐடி, ஜேஇஇ, ஒலிம்பியாட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெற்று, சிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சதீஸ், முதல்வா் எஸ்.ரோஹித், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.



