அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா
தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் உள்ள டிஎம்சி சட்ட கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய நீதிபதி எஸ்.ஓகா, ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நீதித்துறை தீா்ப்புகள் நாட்டின் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பங்கள் சட்டப்படிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்போது உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு, சட்டம் படிப்பது மற்றும் ஆராய்வது, அதன் அா்த்தத்தைப் புரிந்துகொள்வது மற்றும் குறுகிய காலத்தில் பல தீா்ப்புகளைப் புரிந்துகொள்வது உள்ளிட்டவை மிகவும் எளிதாகிவிட்டது. மாணவா்கள் இந்தத் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.