ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூப...
`செயற்கை தங்கம், தங்கத்தின் மதிப்பை குறைக்குமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம்!

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-உம், பவுனுக்கு ரூ.360-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,710 ஆகும்.

இன்று ஒரு கிராம் பவுன் (22K) விலை ரூ.69,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகும்.
செயற்கை தங்கம் விலையை குறைக்குமா?

'செயற்கை தங்கம், தங்கத்தின் மவுசை குறைக்குமா?' என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
"செயற்கை தங்கம் உருவாக்கப்படுவதாக தற்போது ஆய்வு தகவல்கள் வெளியிடப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரை, தங்கம் என்பது உணர்வுபூர்வமான மற்றும் பாரம்பரியமான ஒன்று. அதனால், இந்தியர்கள் செயற்கை தங்கத்தை விரும்புவார்களா என்பது பெரியக் கேள்வி. அவர்கள் செயற்கைத் தங்கத்தை கவரிங் தங்கமாகக் கூட கடக்க வாய்ப்புள்ளது.
இன்னொரு பக்கம், அவசரத்திற்கு அடமானம் வைக்க தங்கம் பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால், செயற்கை தங்கத்தை அடமானம் வைக்க முடியாது. அதனாலும், இந்தியர்கள் செயற்கை தங்கத்திற்கு மதிப்பு தருவது சந்தேகம் தான். காலப்போக்கில் தான் மக்கள் செயற்கை தங்கம் பக்கம் செல்வார்களா என்பது தெரியும்" என்கிறார் ரெஜி தாமஸ்.