மண்சோறு சாப்பிட்டால் படம் வெற்றி அடையுமா? ரசிகர்களைக் கண்டித்த சூரி!
Gold Rate : பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் நீடிக்கும் தங்கம் விலை... எத்தனை நாளுக்கு இது தொடரும்?

தங்கம் விலை இன்று உயர்ந்திருந்தாலும் ரூ.70,000-க்கும் கீழ் நீடிப்பது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.110 -உம், பவுனுக்கு ரூ.880-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,720-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கம் (22K) பவுனுக்கு ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.108-க்கு விற்பனை ஆகி வருகிறது.
தங்கம் விலை இறக்கம் குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பேசுகையில்...

``அமெரிக்க டாலரின் மதிப்பு பலமடைந்து வருவதாலும், போர் பதற்றம் குறைப்பு போன்றவற்றாலும் தங்கத்தின் விலை இறங்கி வருகிறது. என்னுடைய கருத்துப்படி, அடுத்த 90 நாள்களுக்கு தங்கம் விலை இதே அளவில் சின்ன ஏற்ற, இறக்கங்களோடு தொடரும். விலை வீழ்ச்சியும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும்.
பங்குச்சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் நீங்களை அதை விட்டு வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம், 90 நாட்களுக்கு பிறகு, வரி விதிப்பு போன்று உலகத்தில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம்.
எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதை அப்படியே தொடருங்கள். ஒட்டுமொத்தமாக முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் அந்த முதலீடுகளை பிற பங்குகள் பக்கம் மாற்றலாம்.” என்கிறார்.