செய்திகள் :

ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

post image

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனமானது மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரயில் விகாஸ் நிகாம் 10.56 சதவிகிதம் அதிகரித்து ரூ.415.60க்கு வர்த்தகமானது.

மத்திய ரயில்வே நாக்பூர் பிரிவில் உள்ள இடார்சி - ஆம்லா பிரிவில் உள்ள ஃபீடிங் சிஸ்டத்தில் தற்போதுள்ள 1x25 கிலோவோல்ட் மின்சார இழுவை அமைப்பை 2x25 கிலோவோல்ட் ஆக மேம்படுத்துவதற்கான மேல்நிலை மின்மயமாக்கல் மாற்றியமைத்தல் பணிகளுக்காக நிறுவனம் மத்திய ரயில்வேயிடமிருந்து ஏற்பு கடிதத்தை பெற்றுது.

இந்த ஒப்பந்தம் ரூ.115,79,37,241.11 கோடி எனவும், இதை இரண்டு வருடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் மே 21, 2025 அன்று நடைபெற உள்ள நிலையில், இதன் மூலம் மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகை இருந்தால், அதை வாரியம் பரிந்துரைக்கும்.

இந்தப் பங்கு ஜூலை 15, 2024 மற்றும் மே 17, 2024 ஆகிய தேதிகளில், 52 வார அதிகபட்ச விலையான ரூ.647.00 மற்றும் குறைந்தபட்ச விலையான ரூ.280.65-ஐ எட்டியது.

தற்போது, ​​இந்தப் பங்கு 52 வார அதிகபட்ச விலையை விட 35.77 சதவிகிதம் குறைவாகவும், 52 வார குறைந்தபட்ச விலையை விட 48.08 சதவிகிதம் அதிகமாகவும் வர்த்தகமானது. அதே வேளையில் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.86,653.44 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு

வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெ... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு,... மேலும் பார்க்க

சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் இன்று நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் குறைந்து 82,330.59 புள்ளிகளாக நிறைவடைந்தது.முடிவில் சென்செக்ஸ் 0.... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெகுவாக உயர்ந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.மூதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை தொட... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,392.63 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க