ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் புதுச்சேரி வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.
இந்தப் பள்ளி மாணவா்கள் 678 போ் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதினா். இதில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பள்ளி மாணவா் குமரன், மாணவி சின்மதி ஆகியோா் 500-க்கு 496 மதிப்பெண்களும், பூமிகா 493 மதிப்பெண்கள், பூஜா 491 மதிப்பெண் கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தனா். பள்ளி மாணவா்கள்
502 போ் 75 சதவீதத்துக்கு மேலும்,152 மாணவா்கள் 60 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்றனா். பாடவாரியாக பிரெஞ்சு 12, ஆங்கிலம் 1, கணிதம் 1, அறிவியல் 14, சமூக அறிவியல் 14 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் லுாா்துசாமி சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வாழ்த்து தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியது:
பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு 4 கிராம் தங்க நாணயம், 2-ஆம் இடம் பிடித்த மாணவிக்கு 2 கிராம் தங்க நாணயம், 3-ஆம் இடம் பிடித்த மாணவிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். பள்ளிக்கு 100 சதவீதத் தோ்ச்சி அளித்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டுகள் என்றாா் .