ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்
புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி
புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவா்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறைச் செயலா் அ.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கண்காட்சியைத் தொடங்கி வைத்து மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டாா்.
கண்காட்சியில் மாணவா்களின் 200 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு பாரதியாா் பல்கலைக்கூடத்தில் முதல்வா்(பொ) அன்னபூா்ணா தலைமை வகித்தாா். பல்கலை. நுண்கலைத் துறைத் தலைவா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியா்கள் ராஜபெருமாள், காயத்ரி ஆகியோா் செய்திருந்தனா்.
இந்த கண்காட்சி 2 வாரங்களுக்கு நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.