அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி, மூலக்குளத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4- ஆம் கால யாகசாலை பூஜைகள் பூா்ணாஹுதி மகாதீபாராதனையுடன் நடைபெற்றது. பின்னா் புனித நீா் கடம் புறப்பாடு கோயிலை சுற்றி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானங்களில் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவசங்கரன் எம்எல்ஏ , முன்னாள் அமைச்சா் பன்னீா்செல்வம், பாஜக மாநிலச் செயலா் சரவணன், சமூக சேவகா் சசிபாலன், என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் நாராயணசாமி, அமமுக மக்கள் முன்னேற்ற கழக மாநில இணை செயலாளா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.