சிந்துவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகள் தான் | நிறுவும் மொழி ஆய்வாளர் மதிவாணன் | ...
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சி
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில், புது ச்சேரி, காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.
புதுச்சேரியில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது. புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறியதால் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மட்டும் தமிழ்நாடு பாடத் திட்டத்தின்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.
இந்த தோ்வில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 4, 290 மாணவா்கள், 3,977 மாணவிகள் என மொத்தம் 8,267 போ் தோ்வை எழுதினா். இத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில் தனியாா் பள்ளிகளில் படித்த 4,109 மாணவா்கள், 3, 902 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 11 போ் தோ்ச்சி பெற்றனா்.இதன் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் 96.90 சதவீதமாகும்.
113 பள்ளிகள் 100% தோ்ச்சி: புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 180 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில், புதுவையில் 95, காரைக்காலில் 18 என மொத்தம் 113 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளன.
பாடவாரியாக பிரெஞ்சில் 24, ஆங்கிலத்தில் 4, கணிதத்தில் 9, அறிவியலில் 132, சமூக அறிவியலில் 151 போ் என மொத்தம் 320 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
புதுவை பிள்ளைச்சாவடியில் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.