செய்திகள் :

`நள்ளிரவில் வந்த போன்; இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியது’ - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

post image

கடந்த மே மாதம் 10-ம் தேதி, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி முடித்தது.

'இந்திய ராணுவத்தை நாங்கள் தான் பெருமளவில் தாக்கினோம்' என்று இதுவரை கூறிவந்த பாகிஸ்தான், நேற்று ஒரு உண்மையை உடைத்து பேசி பேசியுள்ளது.

நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "மே 10-ம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனீர் எனக்கு போன் செய்து நமது விமானப் படை தளங்களையும், பிற பகுதிகளையும் இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியுள்ளன என்று கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

நமது விமானப்படை நமது நாட்டிலேயே தயாரித்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நமது நாட்டை காப்பற்றியது. அவர்கள் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கூட பயன்படுத்தினார்கள்.

நான் நமாஸ் முடித்தப்பிறகு, நீச்சல் குளத்திற்கு சென்றேன். அப்போது என்னுடன் என்னுடைய தனிப்பட்ட போன் மட்டும் இருந்தது. போன் இரண்டாவது முறையாக அடித்தது. அது அசிம் முனீர் தான். அப்போது அவர் பாகிஸ்தான் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டது" என்று கூறினார்.

இதுவரை இந்தியா தங்களது விமானப்படை தளங்களை தாக்கவில்லை என்று கூறி வந்தது பாகிஸ்தான். ஆனால், உண்மையை இப்போது பாகிஸ்தான் பிரதமரே உடைத்திருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவ... மேலும் பார்க்க

ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்டது எப்படி?

இந்தியா மற்றும் உலக அரங்கின் பரபரப்பு செய்தியே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியும் நேற்று, உரையாடி கொண்டது தான். 'ஏன் இது அவ்... மேலும் பார்க்க

"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் என்ன சொல்கிறார்?

மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாட்டில் முதன்மையான பிரச்னை தேசிய உணர்வு. நமது நாட்... மேலும் பார்க்க