செய்திகள் :

சவுதி அரேபியா: ட்ரம்ப்பை வரவேற்று `அல்-அய்யாலா' நடனம்; வைரலாகும் காட்சிகள்.. பின்னணி என்ன?

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்டார். டிரம்ப்பின் இந்த 2.0 ஆட்சி முறை இதுவரை இல்லாத அளவிற்கு வேறொரு அதிரடி கோணத்தில் இருக்கும் என்று கணித்து போன்றே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், 4 நாள்கள் அரசு முறை பயணமாக டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்ற டிரம்ப் தனி விமானம் மூலம் ரியாத் விமானநிலையம் சென்றடைந்தார்.

அங்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் அரசு சார்பில் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் சவுதி நாட்டு ஆண்கள் இசைக்கருவிகளை வாசிக்க , அந்நாட்டு பெண்கள் தலைமுடியை அவிழ்த்து விட்டு இசை தாளத்திற்கு ஏற்ப சுழற்றி விட்டு பாடல் பாடி ஆடுகின்றனர். இது‌ பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புரங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து பாடும் போதும் இதே போன்று தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவது போன்றே இருக்கிறது.

இப்படி தலைமுடியை அவிழ்த்து சுழற்றுவிட்டு பாடுவது சவுதி அரேபியாவின் பாரம்பரிய நடன முறையில் ஒன்று. இதற்கு அல்-அய்யாலா எனப்பெயர்.

அல்-அய்யாலா என்பது பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள் இசையை வாசிக்க, பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அந்த இசை தாளத்திற்கு ஏற்ப தலைமுடியை சுழற்றி பாடலுக்கு ஏற்ப ஆடுவதாகும். இந்த நடனம் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளிலும் கொண்டாட்டங்கள் மற்றும் திருமணங்களின் போது பொதுவாக நிகழ்த்தப்படுகிறது.

அரசு முறை பயணமாக தங்கள் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை , சவுதி நாட்டு பாரம்பரிய‌ கலாச்சார முறையை பறைச்சாற்றி வரவேற்கும் விதமாக இந்த அல்-அய்யாலா நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

வரவேற்பை ஏற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் எவ்வளவு அழகான நகரம் இது . எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இங்கு வந்ததில் மிகிழ்ச்சி என பேசியிருந்தார்.

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' - அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்... மேலும் பார்க்க

``எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' - கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

'ரஷ்யா - உக்ரைன் போர் நிற்கப்போகிறதா?', 'புதினும், ஜெலன்ஸ்கியும் நேரில் சந்தித்து கொள்ளப்போகிறார்களா?' என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. ஆன... மேலும் பார்க்க

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில... மேலும் பார்க்க

Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்.. காரணம் என்ன?

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வரவேற்க அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது மண்டியிட்டு வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஐ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின்... மேலும் பார்க்க