RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விடுத்து, மும்பை காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நியாயமற்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினருடன் இணைந்து காவல்துறையினரும் வளாகம் முழுவதும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டன.
தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!
இருப்பினும், இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அந்த மின்னஞ்சலை வெறும் புரளி என்று காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் இதுகுறித்து அடையாளம் தெரியாத மர்ம நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னஞ்சலை அனுப்பியவரை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.