கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நோயாளி ஒருவரை மீட்பதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் சென்றபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தட்டையான மேற்பரப்பில் அவசரமாக தரையிறங்கும் போது ஹெலி ஆம்புலன்ஸின் வால் ரோட்டார் திடீரென உடைந்தது.
உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!
இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு மருத்துவர்களும் விமானியும் பாதுகாப்பாக இருந்தனர் என்று மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி ராகுல் சௌபே தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தும் என்று சௌபே மேலும் கூறினார்.