சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு தி...
ஆண்டவரே என்ன இது... புலம்பும் சிம்பு ரசிகர்கள்!
தக் லைஃப் திரைப்படத்தின் காட்சிகள் சிம்பு ரசிகர்களிடம் சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த டிரைலரில் தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை (சிம்பு) கேங்ஸ்டரான ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) அடைக்கலம் கொடுத்து தன் நிழல்போல் வளர்ப்பதும் பின்பு சிம்புவே கமலுக்கு எதிராகத் திரும்புவதுபோலவும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
இதுவே, படத்தின் கதையை ஊகிக்க வைத்திருப்பதால் இப்படம் நாயகன், செக்கச் சிவந்த வானம் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சுவாரஸ்யமாக இன்னொரு வாதமும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது. சிம்பு - த்ரிஷா இருவரும் இப்படத்தில் இருந்ததால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் இதிலும் இருவரது காதல் காட்சிகள் இடம்பெறலாம் என சிம்பு ரசிகர்கள் காத்திருந்தனர்.
Etho #VTV pair magic paapingre athe paapingenu sonnange paatha inge #Thoongavanam#ManmathanAmbu pair varuthu https://t.co/vJsue4fzIf
— செல்வரசன் ✨️ (@selvadedy) May 17, 2025
ஆனால், டிரைலரில் த்ரிஷாவுடன் கமல்ஹாசன் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றதுடன், கமல் த்ரிஷாவைப் பார்த்து, “மேடம் நான் உங்களின் ஆடம்” (madam... iam your adam) எனக்கூறும் வசனமும் இருந்தது. இதைப் பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மேலும், விண்ணைத்தாண்டி வருவாயாவின் இரண்டாம் பாகம் போல காட்சிகள் இருக்கும் என நினைத்தால் மன்மதன் அம்பு, தூங்காவனம் மாதிரி மணிரத்னம் நமக்கு டுவிஸ்ட் கொடுத்துவிட்டார் என புலம்பி வருகின்றனர்.
இதையும் படிக்க: 4 மாதத்தில் திருமணம்: விஷால்